நானே கல்கி அவதாரம்: வேலைக்கு வரமாட்டேன்: அரசு அதிகாரியின் அட்டூழியம்!

சனி, 19 மே 2018 (19:00 IST)
குஜராத் அரசு அதிகாரி ஒருவர் தன்னை கல்கி அவதாரம் என்றும், இதனால், பணிக்கு வரமாட்டேன் என்றும் கூறி வருவது இங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
குஜராத் அரசு அதிகாரி ரமேஷ் சந்திர ஃபிபார். இவர் சர்தார் சரோவர் புனர்வஸ்வத் ஏஜென்சியில் கண்காணிப்புப் பொறியாளர் பதவி வகிப்பவர். இவர் கடந்த 8 மாதத்தில் 16 நாட்கள் மட்டுமே அலுவலகம் சென்றுள்ளார். 
 
இதனால், இவருக்கு ஏன் வேலைக்கு வருவதில்லை என கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸுக்கு அவர் பதில் அளித்தது பின்வருமாறு, 
 
விஷ்ணுவின் 10 வது அவதாரமான கல்கி அவதாரம் நானே. இதனால் அலுவலகத்துக்கு வரமாட்டேன். பிரபஞ்சத்தின் 5 வது பரிமாணத்துக்குள் நுழைந்து உலக மனசாட்சியை மாற்றப்போகிறேன். அதற்காக வீட்டில் நோன்பு இருக்கிறேன் என பதில் அளித்துள்ளார். 
 
மேலும், இந்த விளக்கத்தை யாரும் நம்பமாட்டார்கள். விரைவில் நானே கல்கி அவதாரம் என நிரூபிப்பதாக தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்