மயான ஊழியர்களும் முன்கள பணியாளர்களே! – குஜராத் அரசு அறிவிப்பு!

வியாழன், 13 மே 2021 (10:36 IST)
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவியுள்ள நிலையில் குஜராத்தில் மயான பணி செய்வோரும் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகரித்துள்ளனர். தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் உயிரிழப்புகளும் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில் இறந்தவர்களை எரியூட்டும் பணி அதிகரித்துள்ளது. பல இடங்களில் எரியூட்டும் மயானங்களில் ஆள் பற்றாக்குறையும் நிலவுகிறது. இந்நிலையில் மயானங்களில் பணிபுரியும் ஊழியர்களை முன்கள பணியாளர்களாக குஜராத் அரசு அறிவித்துள்ளது. மயானத்தில் பணி புரிபவர்கள் தொற்று காரணமாக உயிரிழந்தால் அவர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்