விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்

வியாழன், 29 மார்ச் 2018 (17:07 IST)
இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ இன்று வெற்றிகரமாக ஜிஎஸ்எல்வி - எஃப்08 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

 
இந்திய விண்வெளி விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வ - எஃப்08 ராக்கெட் சாட் 6ஏ செயற்கைக்கோளுடன் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. 8,142 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை சுமந்து கொண்டு இந்த ராக்கெட் பறக்கிறது.
 
பருவ நிலை மாற்றம் குறித்து அறியவும், தகவல் தொடர்பை மேம்படுத்தவும் இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இது ஏற்கனவே விண்ணில் ஏவப்பட்ட சாட் 6ஏ செயற்கைக்கோளை  விட சற்று மேம்படுத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.
 
மேலும் இந்த சாட் 6ஏ செயற்கைக்கோள் இன்னும் 10 ஆண்டுகளுக்கு செயலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்