சமையல் சிலிண்டருக்கான மானியம் ரத்து - அதிர்ச்சி கொடுக்கும் மத்திய அரசு

திங்கள், 31 ஜூலை 2017 (18:37 IST)
பொதுமக்கள் பயன்படுத்தும் சமையல் சிலிண்டருக்கு அளிக்கப்படும் அரசு மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.


 

 
மத்தியில் மோடி அரசு பொறுப்பேற்ற பின் பல அதிரடியான திட்டங்களை அறிமுகம் செய்தது. புதிய ரூபாய் நோட்டுகள், ஆதார் அட்டை கட்டாயம், மாட்டிறைச்சி என பல சட்ட, திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது.
 
இந்நிலையில், பொதுமக்கள் பயன்படுத்தும் சமையல் சிலிண்டருக்கான மானியத்தை வருகிற 2018ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியோடு ரத்து செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும், மாதந்தோறும் ரூ.4 என்ற அளவுக்கு சிலிண்டரின் விலையை உயர்த்தவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
 
சிலிண்டருக்கான மானியத் தொகை, பொதுமக்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வந்த நிலையில், இந்த செய்தி பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்