கோபி மஞ்சூரியன், பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு அரசு தடை

Sinoj

திங்கள், 11 மார்ச் 2024 (14:24 IST)
ரோடோமைன் பி ரசாயனம் கலந்த கோபி மஞ்சூரியன் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு கர்நாடக அரசுதடை விதித்துள்ளது.

பஞ்சு மிட்டாயில் நிறமேற்ற பயன்படுத்தும் கெமிக்கலில் புற்றுநோய் ஏற்படுத்தும் ஆபத்தான வேதிப்பொருட்கள் இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. 
 
முதலில் புதுச்சேரியிலும், பிறகு சென்னையிலும் பஞ்சு மிட்டாய்களில் நடத்தப்பட்ட இந்த சோதனைக்கு பின் தமிழகம் முழுவதும் பிங்க் நிறத்திலான கலர் பஞ்சு மிட்டாயை விற்க தடை விதிக்கப்பட்டது.
 
மேலும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பிங்க் பஞ்சு மிட்டாய் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்” என்று உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்தனர்.
 
இந்த நிலையில், ரோடோமைன் பி ரசாயனம் கலந்த கோபி மஞ்சூரியன் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு கர்நாடக அரசுதடை விதித்துள்ளது.
 
புற்று நோய், கல்லீரல் தொடர்பான  நோய்களுக்கு வித்திடும் ரோடோமைன் பி ரசாயனம் கலந்த கோபி மஞ்சூரியன், பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடைவித்து கர்நாடக சுகாதரத்துறை உத்தரவிட்டுள்ளது.
 
மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் இத்தடையை மீறி விற்பனைசெய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்