காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி ராணுவ அதிகாரத்தை பாதிக்குமா?

புதன், 20 ஜூன் 2018 (21:28 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆட்சி செய்து வந்த மக்கள் ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாரதிய ஜனதா கட்சி நேற்று திடீரென வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து முதல்வர் மெகபூபா முப்தி ராஜினாமா செய்தார்.
 
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் ஆளுனர் ஆட்சி அமலுக்கு வந்தது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அங்கு ஆளுனர் ஆட்சிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். ஆளுனர் ஆட்சி ஆறு மாத காலத்திற்கு இருக்கும் என்றும், அதற்குள் புதிய அரசு அமைய முயற்சி எடுத்தால் ஆளுனர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆளுநர் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளதால் ராணுவ அதிகாரத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், ராணுவ தளபதி பிபின் ராவத் இது குறித்து கூறியுள்ளார். 
 
தற்போது ஏற்பட்டுள்ள ஆளுநர் ஆட்சியால் பங்கரவாதத்துக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் எவ்வித பாதிப்பும் இருக்காது. இதுவரை எடுக்கப்பட்ட அதே நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லாமல் இனியும் தொடரும். இதில் எந்த அரசியல் குறுக்கீடுகளும் இல்லை என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்