இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த கொரோனா கடந்த சில வாரங்களாக மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் எபோலா வைரஸை கட்டுப்படுத்த கண்டறியப்பட்ட “ரெம்டெசிவிர்” மருந்து கொரோனா ஆரம்ப தொற்று உள்ளவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மருந்தை இந்தியாவில் 7 நிறுவனங்கள் தயாரித்து வரும் நிலையில் தற்போது கொரோனா அதிகரிப்பு காரணமாக “ரெம்டெசிவிர்” மருந்து குப்பிகளை அதிகமாக தயாரிக்க மத்திய அரசு மருந்து நிறுவனங்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் மருந்தின் விலையை 3500 ரூபாய்க்கும் கீழ் குறைக்க மருந்து நிறுவனங்களும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.