உ.பி மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் மரணம் அடைந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஏற்கனவே ஆக்சிஜர் சப்ளை செய்யும் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்துள்ள உபி அரசு தற்போது பல குழந்தைகளை காப்பாற்றி மக்கள் மனதில் இடம்பிடித்த டாக்டர் ஒருவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
கோரக்பூரில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் காஃபீல் கான் என்பவர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் பலியாகிவருவதை அறிந்தவுடன் உடனே தனது டாக்டர் நண்பரின் ஒருவரின் கிளினிக்கில் இருந்தும் தனது சொந்தக்காசில் ரூ.10000 செலவு செய்து வெளியில் இருந்து ஆக்சிஜன் வரவழைத்தும் பல குழந்தைகளின் உயிரை காப்பாற்றினார்.