பெங்களூரில் உலகத்தரத்தில் ஆய்வுக்கூடம்: கூகுள் அறிவிப்பு

வியாழன், 19 செப்டம்பர் 2019 (20:27 IST)
பெங்களூரில் உலக தரத்தில் புதிதாக ‘செயற்கை நுண்ணறிவு’ஆய்வு கூடம் ஒன்றை அமைக்கவிருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
 
‘கூகுள் பார் இந்தியாவின்’ 5வது மாநாடு டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கூகுள் நிறுவனத்தின் இந்திய பிரிவு துணைத் தலைவர் ஜெய் யாக்னிக் அவர்கள் கலந்து கொண்டு பேசியபோது, ‘பெங்களூருவில், உலக தரத்திலான செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆய்வுக் கூடத்தை அமைக்கவிருப்பதாகவும், இதன்மூலம் கூகுள் பயனாளிகளுக்கு பல பயன்களை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
 
மேலும் வலிமையான ஒரு குழுவை உருவாக்கி அடிப்படை கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வு மேற்கொண்டு, நாட்டின் பல ஆராய்ச்சி பங்குதாரர்களுடன் இணைந்து செயல்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நுண்ணறிவு ஆய்வு முடிவுகள் சுகாதார பிரிவு, விவசாயம், கல்வித்துறை மேம்பட உதவும் என்றும் அவர் மேலும் கூறினார். இந்த புதிய ஆய்வுக்கூடத்திற்கு பிரபல விஞ்ஞானி மணிஷ் குப்தா தலைவராக செயல்படுவார் என்றும், இது ஆய்வாளர்களுக்கு மேலும் ஊக்கத்தை அளிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
 
 
கூகுளின் இந்த அறிவிப்பினால் இந்தியாவின் தொழில்நுட்பத்துறை உச்சத்திற்கு செல்லும் என்றும் இந்த ஆய்வு முடிவுகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்