வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகளை கூகுள் வாங்குகிறதா? பரபரப்பு தகவல்

வெள்ளி, 29 மே 2020 (17:10 IST)
வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகளை கூகுள் வாங்குகிறதா
இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு துறையான ஜியோவின் பங்குகளின் சில சதவிகிதம் விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் தற்போது வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை வாங்குவதற்கு கூகுள் நிறுவனம் பரிசீலனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது 
 
வோடோபோன் நிறுவனம் மத்திய அரசுக்கு 54 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளதால் அந்நிறுவனம் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர அந்நிறுவனம் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறது. இதனை அடுத்து அந்நிறுவனத்தின் பங்குகள் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் வோடோபோன் ஐடியா நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை உலகின் முன்னணி நிறுவனமான கூகுள் வாங்குவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது 
 
ஏற்கனவே கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் என்ற நிறுவனம் ஜியோவின் பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது வோடபோன் நிறுவனத்தின் பங்குகளையும் கூகுள் வாங்க முயற்சித்து வருவதாக வெளி வந்திருக்கும் செய்தி இந்திய தொலைத்தொடர்பு துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்