தங்கத்தின் மீதான காதல் பெண்களுக்கு எப்போதும் இருக்கும் நிலையில் தங்கத்திலும் மோசடி செய்யும் கும்பல் இருக்கதான் செய்கிறது. இதனை தடுக்கும் பொருட்டு இந்திய தர நிர்ணய அமைப்பின் சான்றான ஹால்மார்க் முத்திரையும் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும் எனவும் இது கடந்த ஜனவரி மாதமே நடைமுறைப்படுத்துவது என 2019 ஆம் ஆண்டே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கொரோனா சூழல் காரணமாக இதில் தாமதம் ஏற்பட்டு இந்த புதிய விதி இன்று முதல் அமலுக்கு வருகிறது. முதல்கட்டமாக நாடு முழுவதும் 256 மாவட்டங்களில் இது அமலுக்கு வருகிறது. இதன்படி, தங்க நகை விற்பனையாளர்கள் இனி 14, 18 மற்றும் 22 கேரட் ஆகிய மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்கத்தை விற்பனை செய்ய வேண்டும்.