ஐபிஎல் சூதாட்டத்தில் ரூ.1.50 கோடி நஷ்டம்.. இளம்பெண் தற்கொலை..!

Mahendran

புதன், 27 மார்ச் 2024 (13:59 IST)
ஐபிஎல் சூதாட்டத்தில் ரூ.1.50 கோடி வரை இளைஞர் ஒருவருக்கு நஷ்டம் ஆன நிலையில் அவரது மனைவி மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.
 
ஐபிஎல் போட்டி கடந்த சில நாட்களாக நடந்து வரும் நிலையில் ஐபிஎல் சூதாட்டங்களும் சட்டவிரோதமாக நடைபெற்று வருகிறது என்றும் இதன் மூலம் கோடி கணக்கான ரூபாய் பண பரிவர்த்தனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள உதவி பொறியாளர் தர்ஷன் பாபு என்பவர் ரூபாய் 1. 50 கோடி வரை ஐபிஎல் சூதாட்டத்தில் கட்டி நஷ்டம் அடைந்ததாகவும் அந்த பணத்தை அவர் கடன் வாங்கி கட்டிய நிலையில் கடன் கொடுத்தவர்கள் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. 
 
தினமும் வீட்டுக்கு வந்து கடன் கொடுத்தவர்கள் மரியாதை குறைவாக பேசியதால் அதிர்ச்சி அடைந்த தர்சன் பாபுவின் மனைவி ரஞ்சிதா என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் ரஞ்சிதாவின் பரிதாப முடிவு அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த நிலையில் ரஞ்சிதாவின் தந்தை தனது மகள் மரணம் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று புகார் அளித்த நிலையில் இந்த புகார் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்