நேற்று டெல்லியின் கரோபாக் பகுதியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் நேற்று அதிகாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்தக் கட்டிடத்திலும் விதிமீறல்கள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு டெல்லி அரசு சார்பில் தலா 5 லட்சம் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக டெல்லி அரசு மீது முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரரும் டெல்லிவாசியுமான கவுதம் கம்பீர் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.
இது சம்மந்தமாக ‘அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களே... மனித உயிர்கள் கண்டிப்பாக 5 லட்சம் ரூபாயை விட அதிக மதிப்பு கொண்டது. அரசு இயந்திரம் மக்களைப் பற்றி என்ன நினைக்கிறது என்பதை இந்த இழப்பீடு அறிவிப்பு சுட்டிக் காட்டுகிறது. டெல்லியில் ஆழமாக வேரூன்றிப் போயுள்ள ஆக்கிரமிப்பு, விதிமீறல்கள் போன்ற புண்ணுக்கு 5 லட்சம் இழப்பீடு என்பது பேண்டெய்டு ஒட்டுவது போலத்தான். இவற்றைக் களைய நிர்வாக ரீதியான அறுவை சிகிச்சை டெல்லிக்குத் தேவைப்படுகிறது’ எனக் கூறியுள்ளார்.