அப்போது, அந்த நால்வரில் ஒருவர் தான் வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து சஞ்சயை நோக்கி சுட்டுள்ளார். அவர் கீழே விழுந்தவுடன் அவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதன் பின் அங்கிருந்தவர்கள் சஞ்சயை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர்.
போலீசாரின் விசாரணையில் முகமது பைரோஸ் என்பவர்தான் சஞ்சயை சுட்டிக் கொன்றார் என சஞ்சயின் சகோதரர் வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து முகமது பைரோஸை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவான மற்ற 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.