நாளை முதல் கவுண்டரில் இலவச தரிசன டிக்கெட்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திங்கள், 14 பிப்ரவரி 2022 (08:20 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக ஆன்லைன் மூலமே வழங்கப்பட்டு வந்த இலவச தரிசன டிக்கெட்டுகள் தற்போது நேரில் கவுண்டரில் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருந்ததன் காரணமாக திருமலை திருப்பதியில் ஆன்லைனில் மட்டுமே இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டது
 
 இந்த நிலையில் நாளை காலை 9 மணி முதல் பூ தேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசன் காம்ப்ளக்ஸ் மற்றும் கோவிந்தசாமி சத்திரம் ஆகிய இடங்களில் உள்ள கவுண்டர்களில் நேரில் இலவச தரிசன டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
நேரில் கவுண்டரில் டிக்கெட் வாங்க வரும் பக்தர்கள் கண்டிப்பாக கொரோனா வைரஸ் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்