இந்த நிலையில் 60 நாட்களுக்குப் பின்னர் இந்தியாவின் உள்நாட்டு பயணிகள் விமான சேவை இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. சென்னையிலிருந்து முதல் விமானமாக இண்டிகோ விமானம் இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றது என்ற தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் மாஸ்குடன் கூடுதலாக முகம் முழுவதையும் மறைக்கும் பிளாஸ்டிக் மாஸ்கையும் அணிந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு விமானத்தில் வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என்றும் விமான பயணிகள் தங்கள் கையில் தனிமைப்படுத்தப்படுவது தொடர்பான ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை பதித்து கொள்ள வேண்டும் என்றும் 14 நாட்கள் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது
இன்று முதல் விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளதால் வெளிமாநிலங்களில் சிக்கியிருந்த ஏராளமான பொதுமக்கள் தங்களுடைய சொந்த மாநிலத்திற்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் இன்று விமான சேவையை தொடங்கவில்லை என்றும் அம்மாநில அரசு மே 28-ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கலாம் என்று கூறிய ஆலோசனையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது