முதலிரவு நடக்காததால் நண்பர்கள் கேலி....மனைவி, மாமியாரை கொன்ற இளைஞர்

புதன், 15 மார்ச் 2023 (17:27 IST)
ஆந்திராவில் முதலிரவு நடக்காததை வெளியில் கூறிய மனைவி மற்றும் மாமியாரை ஒரு நபர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூர் மாவட்டம் சிந்துல முனி என்ற பகுதில் வசிப்பவர் பிரசாத். இவர் அப்பகுதியில் சொந்தமாக ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன் சரவணன். இவர் தெலுங்கானா மா நிலம் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வலுவின் மகள் ருக்மணிக்கும்( 20) சரவணனுக்கும் இருகுடும்பத்தினர் இருகுடும்பத்தினரும் பேச்சுவார்த்தை முடித்து திருமணம் நடந்தது.

திருமணமான அன்று, சரவணனுக்கும் ருக்மணிக்கும் முதலிரவு ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், அன்று, இருவருக்கும் முதலிரவு நடக்கவில்லை. சரவணனுக்கு இதில், ஈடுபாடில்லை எனத் தெரிகிறது.

திருமணமாகி 2 நாட்களாகியும் முதலிரவு நடக்கவில்லை எனக் கூறப்படுகிரது. இதுபற்றி ருக்மணி தன் பெற்றோரிடம்  கூறியுள்ளார். அவர்கள் இதை அருகிலுள்ளோரிடம் கூறியுள்ளனர்.

இது எப்படியோ எல்லோருக்கும் தெரிந்து கடைசியில் சரவணனின் நண்பர்களுக்கும் தெரிந்து, இதுபற்றி அவரைக் கிண்டல் செய்துள்ளனர். இதனால், மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஆத்திரம் கொண்ட சரவணன் தன் பெற்றோருடன் சேர்ந்து இதற்குத் திட்டம் தீட்டி, ருக்மணி மற்றும் அவரது தாயாரை வெட்டிக் கொன்றனர்.

இதில், உயிர்தப்பிய வெங்கடேஸ்வரலு தற்போது  மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சரவணன் மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்