முதியவர்களுக்கான இலவச உதவி எண் அறிவிப்பு – மத்திய அரசு
புதன், 29 செப்டம்பர் 2021 (16:11 IST)
இன்று உலகம் முழுவதும் முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது. எனவே மூத்த குடிமக்களுக்கான இலவச உதவி எண்ணை மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
தாயின் வயிற்றில் குழந்தையாகப் பிறந்து பருவம் எய்தி, திருமணமாகி, குழந்தைகள் பெற்று முதிய பருவத்தை எட்டுவது எல்லோருக்கும் இயல்புதான். அந்தவகையில் முதியோர்களுக்கு இலவச உதவி எண்ணை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதன்மூலம் முதியோர் தங்களின் ஓய்வூதியம் உள்ளிட்டவற்றிற்கான வழிகாட்டுதல்களையும் தகவல்களையும் இலவசமாகப் பெறமுடியும் என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் அறிவித்துள்ளது.