முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (13:43 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரனோ வைரஸ் தொற்று நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது. மார்ச் மாதம் முதல் ஏழு கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், ஒருநாள் கொரோனா பாதிப்பில் இந்தியா உலகிலேயே முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ்க்கு அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என முக்கிய பதவியில் இருப்பவர்களும் பாதிக்கப்பட்டு வருவது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தன்னுடன் கடந்த ஒரு வாரமாக தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்
 
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்