பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் ரூ.1 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்த முன்னாள் அமைச்சர்

திங்கள், 12 செப்டம்பர் 2022 (12:36 IST)
பெண் ஐஏஎஸ் அதிகாரியிடம் ரூபாய் ஒரு கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கர்நாடக மாநிலம் ஜனதாதளம் கட்சியின் முன்னணி அமைச்சர் மகேஷ் என்பவர் பெண் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி மீது பல்வேறு புகார்களை கூறினார். இந்த நிலையில் ஐஏஎஸ் அதிகாரி ரோகினி மீது அமைச்சர் முன்னாள் அமைச்சர் மகேஷ் மான நஷ்ட வழக்கு தொடர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
சமூக வலைதளங்களில் பெண் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி தனது தோழிகளுடன் பேசிய ஒரு ஆடியோ வெளியானது. அந்த ஆடியோவில் முன்னாள் அமைச்சர் மகேஷ் சிறை செல்லவேண்டும் என்றும் அவர் சிறையில் கம்பி எண்ண வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது 
 
உண்மையில் அந்த ஆடியோவில் பேசியது ஐ.ஏ.எஸ் அதிகாரி தானா என்று விசாரணை நடந்து வரும் நிலையில் தன்னைப் பற்றி தரக்குறைவாக பேசிய ரோகினி மீது ரூபாய் ஒரு கோடி கேட்டு முன்னாள் அமைச்சர் மகேஷ் மைசூர் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார் 
 
இந்த வழக்கை நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டதாகவும் அக்டோபர் 20ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்