ரூ.800 கோடியை ஸ்வாகா செய்த ப்ரம்மாஸ்த்ரா??

ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (11:02 IST)
ப்ரம்மாஸ்த்ரா பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் ஆகியவற்றின் பங்குகளைக் குறைத்துள்ளன என    கூறப்படுகிறது.


பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடித்து அயன் முகர்ஜி இயக்கி வெளியாகிய படம் ப்ரம்மாஸ்த்ரா. இந்த படத்தில் ஆல்யா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜூனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ப்ரீதம் சக்ரொபர்தி இசையமைத்துள்ளார்.

தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பேன் இந்தியா படமாக இந்த படம் வெளியாகியது. மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. படத்தில் கதையம்சம் சிறப்பானதாக இல்லை என்றும் காட்சிகள் மெல்ல நகர்வதாகவும் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்நிலையில் ரன்பீர் கபூர் - ஆலியா பட் நடித்துள்ள இந்த படம் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் ஆகியவற்றின் பங்குகளைக் குறைத்துள்ளன என    கூறப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய திரையரங்கு சங்கிலிகளான பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ்  சந்தை மூலதனத்தில் ஒட்டுமொத்தமாக ரூ.800 கோடிக்கு மேல் இழந்துள்ளன என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்