தேசிய கீதத்தை அவமதித்த முன்னாள் முதல்வர்

வெள்ளி, 27 மே 2016 (16:22 IST)
தேசியகீதத்தை முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா அவமரியாதை செய்துவிட்டதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.
 

 
மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலில்,  திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து, அம்மாநில முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்றுக் கொண்டார். 
 
இந்த விழாவில் நிதியமை்சர் அருண் ஜெட்லி, உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். 
 
இந்த விழாவில், தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, அதைக் கவனிக்காகமல், பரூக் அப்துல்லா செல்போனில் யாரோ ஒருவருடன் பேசிக்கொண்டே இருந்தார். அவரது பேச்சு குறித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக வேகமாக பரவி வருகிறது.
 
இந்த நிலையில், தேசியகீதத்தை அவமானம் செய்த பரூக் அப்துல்லா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு இந்துத்துவா அமைப்புகள் மத்திய அரசை நோக்கி குரல் கொடுத்து வருகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்