ஐதராபாத்தில் பறக்கும் பாம்பு கண்டுபிடிப்பு!!

வியாழன், 20 ஜூலை 2017 (19:27 IST)
ஐதராபாத்தில் பறக்கும் பாம்பு கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு பகுதியில் காணப்படும் இது தெலுங்கானாவில் காண்பது இதுவே முதல் முறையாகும். 


 
 
மரக்கடையில் பாம்பு புகுந்திருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு பாம்புகளுக்கான பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர் சென்ற போது அது பறக்கும் வகையை சேர்ந்த அரிய வகை பாம்பு என்று தெரிந்துள்ளது. 
 
இது குறைந்த விஷம் உள்ள பாம்பு ஆகும். இது பூச்சிகள் மற்றும் பறவை முட்டைகளை உண்ணும். இதை பற்றி ஆய்வு செய்த பின்னர் பாம்பு காட்டில் பத்திரமாக விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்