விமான எரிபொருளும் விலை உயர்வு! – அதிர்ச்சியில் விமான நிறுவனங்கள்!

வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (11:43 IST)
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து விமான எரிபொருளின் விலையும் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில வாரங்களில் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில், இன்று முதல் சுங்க கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. சமீப காலமாக பல்வேறு காரணிகளின் விலை உயர்வது காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் எழுந்துள்ளது.

இந்நிலையில் தற்போது விமான எரிபொருளின் விலையும் உயர்ந்துள்ளது விமான நிறுவனங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 4 மாதங்களில் 7 முறை விலை உயர்ந்த விமான எரிபொருள் தற்போது மேலும் 2 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் விமான எரிபொருள் ரூ.1,12,924க்கு விற்பனையாகி வருகிறது. அதிகரிக்கும் எரிபொருள் விலையால் விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்