ஜன.13 முதல் கொரோனா தடுப்பூசி: மோடி போட்டுக்கொள்வாரா?

செவ்வாய், 5 ஜனவரி 2021 (17:09 IST)
ஜனவரி 13 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி மருந்துகளை விநியோகிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவிற்கு எதிரான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகளும் உள்ள நிலையில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
 
இந்நிலையில் அந்த நிறுவனங்கள் அவசர கால மருந்தாக தங்கள் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதிக்குமாறு மத்திய அரசிடம் கோரின. அதை தொடர்ந்து அந்த இரண்டு தடுப்பூசிகளையும் ஆய்வு செய்த மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு துறை பல்வேறு சோதனைகளுக்கு பிறகு இந்த தடுப்பூசிகளை பயன்படுத்த பரிந்துரை செய்துள்ளது.
 
மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு துறையின் பரிந்துரையை ஏற்று இந்தியாவில் அவசர கால பயன்பாட்டில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை பயன்படுத்தலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே, ஜனவரி 13 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி (கோவிஷீல்டு, கோவாக்சின்) மருந்துகளை விநியோகிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, ஜனவரி 13 முதல் முதற்கட்டமாக கொரோனா முன்களப்பணியாளர்களான மருத்துவத் துறையினருக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மற்ற நாடுகளை பொறுத்த வரை கொரொனா தடுப்பூசி மீது மக்களுக்கு நம்பிக்கை வரும் நோக்கத்தில் பிரதமரோ, அரசு பதவியில் உள்ள முக்கிய நபரோ தடுப்பூசியை போட்டுக்கொள்வர். ஆனால், இந்தியாவில் பிரதமர் மோடி இதனை செலுத்திக்கொள்வாரா என தெரியவில்லை. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்