கணக்கில் காட்டப்படாத கருப்புப்பணத்தை தானாக முன் வந்து வெளிப்படுத்தும் திட்டத்தின் (ஐடிஎஸ்) கீழ் இதுவரை ரூ.65,250 கோடி மதிப்பிலான கருப்புப் பணம் வெளிவந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
இந்த திட்டத்திற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, டில்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
“ஐடிஎஸ் திட்டத்தி கீழ் 64,275 பேர் கணக்கில் வராத தங்களது வருவாய் மற்றும் சொத்துகள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்தியுள்ளனர். அவற்றின் மதிப்பு 65,250 கோடி ஆகும். இதில், 45 சதவீதம் வரியாகவும், அபராதமாகவும் அரசுக்கு செல்கிறது. இந்த நிதி மக்களின் நல்வாழ்வு திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்” என்று கூறியுள்ளார்.