ஹரியானா மாநிலத்தின் 7 மாவட்டங்களில் அனைத்து தொலைத்தொடர்பு சேவைகள் நிறுத்தம்

Mahendran

புதன், 14 பிப்ரவரி 2024 (10:52 IST)
ஹரியானா மாநிலத்தில் இருந்து விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி சென்ற கொண்டிருப்பதன் காரணமாக அந்த பேரணியை தடுத்து நிறுத்தவும் போராட்டத்தை முறியடிக்கவும் ஹரியானா மாநில அரசு மற்றும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தில்

  இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தின் அம்பாலா, குருக்ஷேத்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், ஃபதேஹாபாத் மற்றும் சிர்சா ஆகிய மாவட்டங்களின் தொலைபேசி சேவைகள் தவிர, மொபைல் இணைய சேவைகள், SMS மற்றும் அனைத்து தொலைத்தொடர்பு சேவைகள் பிப்ரவரி 15ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  

 இருப்பினும் டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் கண்ணீர் புகை உள்பட பல்வேறு தடைகளையும் தாண்டி விவசாயிகள் முன்னேறி கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் டெல்லிக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்பட்ட இருப்பதாக மத்திய அரசு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்