ஜூன் 5 இனி முழு புரட்சி தினம்! – விவசாயிகள் அறிவிப்பு!

ஞாயிறு, 30 மே 2021 (12:36 IST)
வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் ஜூன் 5ம் தேதியை முழு புரட்சி தினமாக கடைபிடிக்க போவதாக அறிவித்துள்ளனர்.

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல விவசாயிகள் கடந்த பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பலகட்ட பேச்சுவார்த்தைகளில் சுமூக சூழல் ஏற்படாத நிலையில் கொரோனா பரவலுக்கு நடுவிலும் இந்த போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில் மத்திய அரசு வேளாண் சட்டங்களை அமல்படுத்திய ஜூன் 5ம் தேதியை இனி முழு புரட்சி தினமாக கடைபிடிக்க போவதாகவும், அன்றைய தினம் பாஜக அலுவலகங்கள் முன்பாக வேளாண் சட்ட நகல்களை கிழித்து போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்