70 லாரி தக்காளியை ரோட்டில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்! [வீடியோ]

செவ்வாய், 27 டிசம்பர் 2016 (23:35 IST)
கடுமையான விலை வீழ்ச்சியால் கடும் கோபத்திற்கு உள்ளான விவசாயிகள், 70 லாரி தக்காளியை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 

சத்தீஸ்கர் மாநிலம் டர்க் பகுதியில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் தக்காளி பயிரிட்டிருந்தனர். அங்கு அமோக விளைச்சல் ஏற்பட்டதை அடுத்து தக்காளி கிலோ, வெறும் 1 ரூபாய் என்ற அளவிற்கு கடுமையான விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இதனால், சந்தையில் கட்டுப்படியான விலை விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. வெறும் ஒரு ரூபாய்க்கே வியாபாரிகள் கேட்டுள்ளனர்.

இதனால் விரக்தி யடைந்த விவசாயிகள் 70 லாரி தக்காளியை ரோட்டில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தக்காளிக்கு ஒரு நிரந்தர விலை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அப்போது விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வீடியோ கீழே:

 

வெப்துனியாவைப் படிக்கவும்