ஃபானி புயல்: 8 லட்சம் பேர் வெளியேற்றம், 200 ரயில்கள் ரத்து

வெள்ளி, 3 மே 2019 (08:21 IST)
வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் இன்று பிற்பகல் ஒடிசா மாநிலத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் அம்மாநிலத்தில் உள்ள சுமார் 8 லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் பயணிகளின் பாதுகாப்பு கருதி, 200 க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டதோடு புவனேஸ்வர் விமான நிலையமும் மூடப்பட்டது. மேலும் இன்று ஒடிசா மாநிலத்தில் அனைத்து கல்வி, தொழில் நிறுவனங்களுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஃபானி புயலின்போது ஒடிஷா மாநிலத்தின் கடலோர பகுதியில் 170 முதல் 200 கிமீ வேகம் வரை காற்று வீசும் என்றும் குறிப்பாக கஞ்சம், பூரி, ஜகத்சிங்பூர், கேந்த்ப்டா ஆகிய பகுதிகளில் மிககனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் அந்த பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
மேலும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், இந்த புயலால் ஒரு உயிர்ச்சேதம் கூட இல்லாத வகையில் பாதுகாக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளன. புயல் பாதுகாப்பு பணியில் 8 மாநிலத்தில் இருந்து 25 பேரிடர் மீட்புக்குழுக்களும், 525 தீயணணப்புத்துறை குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்