ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம் … மக்களுக்கும் சுயபொறுப்பு உள்ளது – பிரதமர் மோடி

செவ்வாய், 24 மார்ச் 2020 (20:38 IST)
ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம் … மக்களிகும் சுயபொறுப்பு உள்ளது – பிரதமர் மோடி

பிரதமர் மோடி கடந்த 19ம் தேதி நாட்டு மக்களிடம் உரையாற்றியபோது மார்ச் 22ஆம் தேதி அனைவரும் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதேபோல் அன்றைய தினம் மாலை 5 மணிக்கு டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் கைதட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதனை அடுத்து கடந்த 22ம் தேதி சுய ஊரடங்கு உத்தரவு நடந்தது என்பதும் மாலை 5 மணிக்கு அனைவரும் வீட்டிற்கு முன் வெளியே வந்து கைதட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

தற்போது மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதில்,
ஊரடங்கின் மூலம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் மக்களின் பாதிகாப்பே முக்கியம் . இன்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு மக்கள் ஊரடங்கை கடை பிடிக்க வேண்டும். ஒவ்வொருவரும் எனக்கு முக்கியம். எனவே ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், ஒருவருக்கு தெரியாமலே வைரஸ் தொற்று ஏற்படும், அதனால் வீட்டிக்குள் உறவினர்களை மாத்திரம் அனுமதிக்க வேண்டும். எனக்கு ஒவ்வொரு இந்தியரும் முக்கியம் அதனால் இந்தியர்கள் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் அதற்காக உங்களை கையெடுத்து கேட்டுக்கொள்கிறேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தடைகளை தகர்த்து நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டாம். இன்னும் 21 நாட்களுக்கு தேச மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. மக்கள் விளையாட்டாக இதை எடுத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொண்டு, ஊரடங்கை கடைப்பிடிக்காவிட்டால் நாட்டில் உள்ள குடும்பங்க பல இழப்புகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

நீங்கள் வெளியே சென்றாலும் வைரஸ் உங்கல் வீட்டிற்குள் அடியெடுத்துச் செல்லும் ,. இதற்கு சுய கட்டுப்பாடு சுய சுத்தம் முக்கியம்,  வல்லரசு நாடுகளே கூட கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியவில்லை, இதன் விபரீதத்தை புரியாமல் விளையாட்டாக யாரும் அணுக வேண்டாம் எனகேட்டுக்கொண்டார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்