மாடுகளுக்கு கூட பாதுகாப்பில்லை! பசுக்களுடன் உறவு கொண்ட இருவர் கைது!

Prasanth Karthick

வியாழன், 10 ஏப்ரல் 2025 (08:57 IST)

மத்திய பிரதேசத்தில் பசுக்களுடன் தவறான உறவு மேற்கொண்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில் அவர்களை பாதுகாக்க கடும் நடவடிக்கை தேவை என்ற குரல்கள் தொடர்ந்து ஒலித்து வருகின்றன. ஆனால் நாளாக நாளாக தற்போது விலங்குகளும் கூட பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்ப முடியாத நிலை உருவாகி வருகிறது. 

 

இந்த சம்பவம் நடந்திருப்பது பசுக்களை புனிதமானதாக கருதும் மத்திய பிரதேசத்தில் என்பதுதான் மேலும் ஒரு அதிர்ச்சி. சமீபத்தில் சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஒருவர் இரவு நேரத்தில் யாரும் பார்க்காதபோது பசுமாடுகளுடன் உறவுக் கொள்கிறார். இந்த வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்களும் எழத் தொடங்கின.

 

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் இந்தூரை சேர்ந்த விஜய் என்ற நபரையும், துவாரகா கோஸ்வாமி என்ற நபரையும் கைது செய்துள்ளனர். 

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்