கட்டாய பாடம் உத்தரவை அமல்படுத்தாதது ஏன்? உச்ச நீதிமன்றம்

சனி, 17 செப்டம்பர் 2016 (19:19 IST)
பள்ளி, கல்லூரிகளில் சுற்றுச்சூழல் அறிவியல் பாடத்தை கட்டாய பாடமாக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை இதுவரை அமல்படுத்தாதது குறித்து தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

 
கடந்த 1991ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம், பள்ளி, கல்லூரிகளில் சுற்றுச்சூழல் அறிவியலை கட்டாய பாடமாக அறிவிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
 
இந்நிலையில் அந்த உத்தரவை இதுவரை அமல்படுத்தவில்லை என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்.சி.மேத்தா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் இதுவரை அந்த உததரவை அமல்படுத்தாதது குறித்து மத்திய அரசி பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
 
மேலும் இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்