வைல்ட்லைஃப் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் மூலம் இந்த கணக்கெடுப்பு நவம்பர் 30 (நாளை) தொடங்கி ஆறு மாதங்களில் முடிவடையும். இந்த கணக்கெடுப்பானது பெரியாறு, செந்தூரணி, மூனாறு, பரம்பிக்குளம், அமைதி பள்ளத்தாக்கு மற்றும் வயநாடு காடுகளில் நடத்தப்பட உள்ளது. டீகே மெதட் எனப்படும் சிதைவு முறையில் இக்கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
யானை சாணத்தின் அடர்த்தி, இறந்த, காயமுற்ற யானைகளின் சிதைந்தப் பகுதிகள், யானைக் கழிவுகளின் விகிதம் போன்ற பலக் காரணிகளை உள்ளடக்கிய சூத்திரத்தைக் கொண்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. மேலும் எந்தந்தப் பகுதிகளில் யானைகளின் நடமாட்டங்கள் அதிகமாக உள்ளன என்பதையும் கணிக்க உள்ளார்கள்.