ஒரு வாக்காளர் தனது ஜனநாயக கடமையை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் தேர்தல் ஆணையம் தனது கடமையை செய்கிறதா? என்ற கேள்வியை திருவாளர் வெகுஜனம் கேட்டு வருகின்றார். ஆயிரக்கணக்கான கோடிகள் சொத்து வைத்துள்ள வேட்பாளர்கள் பலர் தங்களுக்கு வெறும் ஒரு கோடி, இரண்டு கோடி மட்டுமே சொத்து இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்களே, இதனை தேர்தல் அதிகாரிகள் சரிபார்த்தார்களா? வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்துக்கள் தவிர வேறு சொத்துக்கள் அந்த வேட்பாளருக்கு இருந்தால் அந்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தால் இதுபோன்று போலியான சொத்துக்கணக்கை காட்ட யாராவது முன்வருவார்களா?
ஆயிரக்கணக்கிலும், லட்சக்கணக்கிலும் வியாபாரிகளும், அப்பாவிகளும் கொண்டு செல்லும் பணத்தை பறந்து பறந்து பறிமுதல் செய்யும் பறக்கும் படையினர் கோடிக்கணக்கில் கடத்தும் அரசியல் பிரமுகர்களை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?