ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு முட்டை பப்ஸ் வாங்கிய செலவாக 3.6 கோடி ரூபாய் செலவு செய்ததாக கணக்கு எழுதப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை ஆந்திராவின் முதல்வராக இருந்தவர் ஜெகன்மோகன் ரெட்டி என்பதும் இவரது ஆட்சி காலத்தில் பல ஊழல்கள் நடந்ததாக குற்றம் காட்டப்பட்டது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த நிலையில் முந்தைய ஆட்சியின் ஊழல்கள் தற்போது வெளியாகி வருகின்றன.
குறிப்பாக ஜெகன் மோகன் ஆட்சி காலத்தில் ஐந்து ஆண்டுகளில் முதல்வர் அலுவலகத்திற்கு முட்டை பப்ஸ் வாங்கிய செலவு என 3.62 கோடி ரூபாய் கணக்கு எழுதப்பட்டுள்ளது. மேலும் ஒரு ஆண்டுக்கு 72 லட்சம் முட்டை பப்ஸ் வாங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மக்கள் பணத்தை ஜெகன் மோகன் தவறாக பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஜெகன் மோகன் ஆட்சியில் நடந்த ஒவ்வொரு ஊழலும் வெளியே வந்து கொண்டிருக்கின்றன என்றும் தெலுங்கு தேச கட்சி விமர்சனம் செய்துள்ளது.