இன்று ஆஜராக 7வது சம்மன்.. கைது செய்யப்படுவாரா முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்..!

Siva

திங்கள், 26 பிப்ரவரி 2024 (08:56 IST)
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜராக வேண்டும் என்று சம்மன்  அனுப்பப்பட்டுள்ள நிலையில் அவர் ஒருவேளை ஆஜராகவில்லை என்றால் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மதுபான கொள்கை வழக்கில் ஊழல் செய்ததாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் இது குறித்து விசாரணை செய்ய ஏற்கனவே ஆறு முறை  அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன்  அனுப்பினர். 

ஆனால் ஆறு முறையும் ஆஜராகாத அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது ஏழாவது முறையாக சம்மன்  அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்த சம்மன்படி இன்று அவர் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

ஆனால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் போல் ஆஜராக மாட்டார் என்று கூறப்பட்டுள்ள நிலையில் அவர் இன்று கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இதே வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்