ஆம், இமயமலை பகுதியில் 8.5 என்ற ரிக்டர் அளவிற்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதாவது பெங்களூரில் உள்ள ஜவகர்லால் நேரு விஞ்ஞான ஆய்வு மையத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுனர் சி.பி. ராஜேந்திரன், அகமதாபாத் விண்வெளி ஆய்வு மையத்தை சேர்ந்த கே.எம்.ஸ்ரீஜித் மற்றும் டெல்லியின் தேசிய புவியியல் ஆய்வு மையத்தை சேர்ந்த வினீத் கஹலாட் ஆகியோர் தனித்தனியாக மேற்கொண்ட ஆய்வில் இந்த நிலக்கடுக்கம் குறித்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது..