மணிப்பூரில் ட்ரோன் மூலம் தாக்குதல்.. வரவழைக்கப்பட்ட ட்ரோன் எதிர்ப்பு துப்பாக்கி..!

Mahendran

செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (15:55 IST)
மணிப்பூரில் இதுவரை துப்பாக்கிகள் மூலம் மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த நிலையில் தற்போது ட்ரோன் மூலம் வெடிகுண்டு வைத்து தாக்குதல் நடத்தப்படுவதால் ட்ரோன் எதிர்ப்பு துப்பாக்கியை மத்திய காவல் படை வரவழைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
மணிப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு முன் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் வன்முறையாக மாறிய நிலையில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக அமைதி திரும்பியது. 
 
ஆனால் திடீர் என மீண்டும் தற்போது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரை துப்பாக்கி மூலம் தாக்குதல் நடத்தி வந்த வன்முறையாளர்கள் தற்போது ட்ரோன்கள் மூலம் வெடிகுண்டுகளை வீசி வருகின்றனர்.
 
இந்த நிலையில் மத்திய ரிசர்வ் காவல் படை ட்ரோன் எதிர்ப்பு துப்பாக்கியை அஸ்ஸாமில் இருந்து மணிப்பூர் மாநிலத்திற்கு வரவழைத்துள்ளதாகவும் ட்ரோன் தாக்குதலை எதிர்கொண்டு முறியடிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும் மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை நிலவிவரும் மூன்று மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்