இன்ஸ்டாகிராமில் பிரபலமான டால்லி சாய்வாலா தற்போது நடந்து முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி மைதானத்திலேயே டீக்கடை போட்டுள்ளார்.
சமூக வலைதளங்கள் மூலமாக கிடைக்கும் உடனடி புகழும், விளம்பரமும் பலரையும் தொடர்ந்து சோசியல் மீடியா மோகத்தில் தள்ளி வருகிறது. ஆனால் அதே சோசியல் மீடியாவை பயன்படுத்தி, கிடைக்கும் குறுகிய நேர புகழை பயன்படுத்தி சிலர் பெரிதாக வளர்ந்து விடுகிறார்கள். அப்படியான ஒருவர்தான் டால்லி சாய்வாலா.
நாக்பூரை சேர்ந்த டால்லி அங்கு சாலையோர டீக்கடை ஒன்றை நடத்தி வந்தார். சினிமா ஹீரோ போல உடையணிந்து ஸ்டைலாக அவர் போடும் டீயை பலரும் குடிக்க வந்த நிலையில், அவரது கடையும் சோசியல் மீடியா மூலமாக பிரபலமானது. எந்த அளவுக்கு பிரபலம் என்றால் பில்கேட்ஸ் இந்தியா வந்தபோது இவர் கடையை தேடி வந்து டீ குடித்து சென்றிருக்கிறார்.
அதை தொடர்ந்து டால்லி மிகவும் பிரபலமானதுடன் இப்போது சில படங்களிலும் நடித்து வருகிறாராம், சமீபத்தில் டெல்லியில் நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி இறுதி போட்டியில் டால்லி சாய்வாலாவின் பிரத்யேகமான டீக்கடை மைதானத்திற்குள்ளேயே அமைக்கப்பட்டுள்ளது. பல கிரிக்கெட் வீரர்கள், பார்வையாளர்கள் அவரிடம் டீ வாங்கி பருகியுள்ளனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் டால்லி சாய்வாலாவின் வளர்ச்சி குறித்து பலரும் வியந்துள்ளனர்.
Edit by Prasanth.K