2வது அலையின் தாக்கமே மோசமகவுள்ளது... அப்போ 3வது அலை??

செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (10:22 IST)
3வது அலை குறித்து கணித்த முன்னாள் ஹைதராபாத் பல்கலைக் கழக துணை வேந்தர் டாக்டர் விபின் ஸ்ரீவஸ்தவா இரண்டாம் அலை குறித்து கவலை கொண்டுள்ளார். 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 28,204 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,19,98,158 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 3வது அலை குறித்து கணித்த முன்னாள் ஹைதராபாத் பல்கலைக் கழக துணை வேந்தர் டாக்டர் விபின் ஸ்ரீவஸ்தவா இரண்டாம் அலை குறித்து கவலை கொண்டுள்ளார். 
 
அதிகாரப்பூர்வ மரண விகிதங்களை மீறி கொரோனா பாதிப்பும் மரணங்களும் அதிகமாகவே உள்ளன. இதனால் 3வது அலை மோசமான நிலைக்குச் செல்லும் என்று எச்சரித்துள்ளார். உண்மையில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையே குணமடைந்தோர் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது என கவலை தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்