ஹைதராபாத் பெண் டாக்டர் உயிரோடு எரிக்கப்பட்டாரா? அதிர்ச்சி தகவல்!

வெள்ளி, 29 நவம்பர் 2019 (07:55 IST)
ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் ஒருவர் தேசிய நெடுஞ்சாலையில் உயிரோடு எரிக்கப்பட்டு பிணமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
ஹைதராபாத்தை சேர்ந்த பிரியங்கா ரெட்டி என்பவர் அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் தனது வீட்டில் இருந்து தினமும் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதேபோல் நேற்று மாலை வழக்கம்போல் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது திடீரென அவரது இரு சக்கர வாகனம் பஞ்சர் ஆகி உள்ளது. வாகனத்தை பஞ்சர் ஒட்ட சாலையில் சென்ற இருவர் உதவி செய்ததாக தெரிகிறது
 
இதனை அடுத்து பிரியங்கா ரெட்டி தனது சகோதரிக்கு போன் செய்து தனது இருசக்கர வாகனம் பஞ்சர் ஆகி விட்டதாகவும் இருவர் தனக்கு உதவி செய்து கொண்டிருப்பதாகவும் கூறினார். உடனே அவரது சகோதரி பாதுகாப்பான இடத்திற்கு போய் இருந்து கொள் என்று அறிவுறுத்தியதாக தெரிகிறது 
 
இந்த நிலையில் சில நிமிடங்களில் பிரியங்கா ரெட்டி மொபைல் போன் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது. இதனால் பதட்டமடைந்த பிரியங்கா ரெட்டியின் குடும்பத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். பிரியங்கா குறிப்பிட்ட இடத்தில் சென்று பார்த்தபோது அங்கு யாரும் இல்லை. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் இன்று அதிகாலையில் ஹைதராபாத்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பிரியங்காவின் உடல் எரிக்கப்பட்டு இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர் 
 
இதனையடுத்து அந்த உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். பிரேத பரிசோதனை முடிவு தெரிந்த பின்னரே அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்பது குறித்து தெரிய வரும் என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன
 
 வேலை முடிந்து வீடு திரும்பிய ஒரு பெண் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டிருப்பது ஹைதராபாத் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்