மாஸ்க் அணியவில்லை என்றால் பயணியை இறக்கிவிடுங்கள்: விமான இயக்குனரகம் உத்தரவு

வியாழன், 9 ஜூன் 2022 (09:27 IST)
மாஸ்க் அணியவில்லை என்றால் பயணியை இறக்கிவிடுங்கள்: விமான இயக்குனரகம் உத்தரவு
மாஸ்க் அணியாமல் இருக்கும் விமான பயணிகளை விமானத்திலிருந்து இறக்கி விடுங்கள் என விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
 
இந்தியாவில் கடந்த சில நாட்களாக படிப்படியாக மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7000 பேர்கள் கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் 
 
இந்த நிலையில் மீண்டும் மாஸ்க் அணிவது கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் விமானங்களில் மாஸ் அணியாத பயணிகளை விமானம் புறப்படுவதற்கு முன் இறக்கிவிட விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது
 
மேலும் விமான நிலையங்கள், விமானங்களில் கொரோனா விதிகளை கண்டிப்பாக பயணிகள் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்