இதனால் அவர் மீது இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் கோபம் அடைந்து உள்ளனர். திருச்சூரில் உள்ள வலச்சிரா பகுதியில் அவர் வீட்டின் அருகே வழக்கமாக நடைபயிற்சி செய்யும் நேரத்தில் மர்ம நபர் ஒருவர் அவரை வழிமறித்து தாக்கி அவர் மீது சாணியை ஊற்றி அவமானப்படுத்தி இருக்கிறார். அவரைத் தாக்கிய அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இயக்குநர் பிரியாநந்தனிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர்.