ஒரு மாதத்திற்கு முன்னர் தமிழகம், கர்நாடகா இடையே காவிரி பிரச்சனை காரணமாக கலகம் மூண்டது. குறிப்பாக கர்நாடகாவில் பெரும் போராட்டங்களும் வன்முறைகளும் அரங்கேறின. இவற்றை முன்னின்று நடத்தியது வாட்டாள் நாகராஜ் என கூறப்பட்டது.
இந்த போராட்டங்களின் போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை எரித்து, புகைப்படங்களை தீயிட்டு கொளுத்தி, மேலும் அவரது உருவ பொம்மையை வைத்து பாடை தூக்கி திதி கொடுத்து எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதன் பின்னர் தான் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் மனம் வருந்திய வாட்டாள் நாகராஜ் அதற்கு பரிகார புஜை நடத்தியதாகவும், இதில் அவரது நம்பிக்கைக்குரிய நபர்கள் கலந்து கொண்டதாக தகவல்கள் வருகின்றன.