தாஜ் மஹாலுக்கு டஃப் கொடுக்கும் குப்பை கிடங்கு.. நோ நோ குப்பை மலை!!
புதன், 5 ஜூன் 2019 (13:38 IST)
டெல்லியில் குப்பை கிடங்கா அல்லது குப்பை மலையா என வியக்க வைக்கும் அளவிற்கு ஒரு இடத்தில் குப்பை கொட்டப்பட்டுள்ளது.
1984 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த குப்பை கிடங்கு 2002 ஆண்டு அதன் முழுகொள்ளவை எட்டியது. இருப்பினும் இன்று வரை இந்த குப்பை கிடங்கு மூடப்படாமல் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.
கிட்டத்தட்ட குப்பை மலை போல் காட்சியளிக்கும் இந்த குப்பை கிடங்கு கிழக்கு டெல்லியில் உள்ள காஸிபூர் என்னும் இடத்தில் உள்ளது. இது இந்தியாவிலேயே உயரமான குப்பை கிடங்கு என்று பெயர் எடுத்துள்ளது.
தற்போது 65 மீட்டர் உயரம் உள்ள குப்பை கிடங்கு இன்னும் ஒரே வருடத்தில் தாஜ் மாஹாலின் உயரமான 73 மீட்டரை தாண்டிவிடும் என கூறப்படுகிறது. இந்த கிடங்கில் ஒரு நாளைக்கு 200 டன் குப்பை கொட்டப்படுவதாக தெரிகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் சுவாசப்பிரச்சனை போன்ற உடல் பாதிப்புகளால் அவதிப்படுகின்றனர். டெல்லி அரசு இதனை கவனத்தில் எடுத்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளது.