கொரோனா இல்லாத மாநிலமாக மாறி வரும் டெல்லி: இன்றைய பாதிப்பு என்ன தெரியுமா?
வியாழன், 2 செப்டம்பர் 2021 (19:14 IST)
கொரோனா வைரஸ் முதல் அலையின்போது தலைநகர் டெல்லியில் மிக அதிக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் அதேபோல் ஆக்சிஜன் பற்றாக் குறையினால் மட்டும் பலர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் டெல்லி மாநில அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக தற்போது அம்மாநிலம் கொரோனா இல்லாத மாநிலமாக கிட்டத்தட்ட உருவாகி விட்டது என்றே கூறலாம். டெல்லியில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெறும் 39 மட்டுமே என்றும் கொரோனாவால் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 38 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு யாரும் இன்றும் உயிரிழக்கவில்லை என்றும் அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
மேலும் டெல்லியில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 25,082 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 344என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது