ஆண் வாரிசு இல்லை: மனைவி, மகளை கொடுமையாய் தாக்கிய வழக்கறிஞர் (வீடியோ)
வெள்ளி, 16 டிசம்பர் 2016 (13:32 IST)
டெல்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகளை தாக்கிய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வசந்த் கஞ்ச் பகுதியில் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் வசித்து வருகிறார். அவருக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது.
அந்த வழக்கறிஞர் தனது மனைவி மற்றும் மகளை கதறக் கதற அடித்துள்ளார். இதை மற்றொரு மகள் வீடியோ எடுத்து போலீசில் கொடுத்துவிட்டார்.
இது குறித்த போலீஸ் விசாரணையில், ஆண் குழந்தை பெற்றுக் கொடுக்காததால் பல ஆண்டுகளாக மனைவி மற்றும் மகளை கொடுமைப்படுத்துகிறார் என்பது தெரியவந்துள்ளது.