சுகாதார சேவைகள், கல்வி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற தயார் என்றும் ஆனால் அதே நேரத்தில் அவற்றை இலவசம் என அழைப்பதை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
ஐந்து ஆண்டுகளில் பல கல்வித் திட்டங்களை நாங்கள் செய்து முடித்திருக்கிறோம் என்று அரசு பள்ளிக்கூடங்கள் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதில் எங்கள் நிபுணத்துவத்தை மத்திய அரசு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அனைத்து மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்றினால் தான் இந்தியாவில் கல்வி மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்