மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜர்: கைது செய்யப்படுவாரா?

ஞாயிறு, 16 ஏப்ரல் 2023 (11:23 IST)
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ முன் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இந்தியாவையே பரபரப்பு ஏற்படுத்திய வழக்கு மதுபான கொள்கை முறைகேடு வழக்கு என்பதும் இந்த வழக்கில் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்த வழக்கில் ஆஜராக வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ள நிலையில் இன்று அவர் ஆஜராக உள்ளார். சிபிஐ முன் இன்று ஆஜராக உள்ள நிலையில் டெல்லி முதல்வர் காணொளி மூலம் பேசி உள்ளார். 
 
அந்த காணொளியில் சிபிஐ மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பு என்றும் அவர்கள் நினைத்தால் யாரையும் சிறைக்கு அனுப்ப முடியும் என்றும் என்னை கைது செய்ய பாஜக கூறினால் சிபிஐ அதையும் செய்யும் என்றும் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்